Categories
தேசிய செய்திகள்

கோட்டக் வங்கியுடன் இணைய போகுதா…? இணையத்தில் வெளியான தகவல்… பெடரல் வங்கி விளக்கம் …!!!!!!

தனியார் வங்கிகளான பெடரல் வங்கியும் கோட்டக் மகேந்திரா வங்கியும் இணைக்கப்பட இருப்பதாக நேற்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெடரல் வங்கியின் பங்கு விலை நேற்று கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடக் மகேந்திரா வங்கியுடன் பெடரல் வங்கி இணைவதாக வெளியான தகவல் வெறும் யுகங்கள் தான் எனவும் இவை அதிகாரப்பூர் தகவல் இல்லை எனவும் பெடரல் வங்கி நேற்று பங்கு சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இது பற்றி பெடரல் வங்கியின் அறிக்கையில் மற்றொரு தனியார் வங்கியுடன் பெடரல் வங்கி இணைக்கப்பட்ட இருப்பதாக பரவி வரும் தகவல் வெறும் யுகத்தின் அடிப்படையில் ஆனது மட்டுமே என்பதை தெளிவுபடுத்திக் கொள்கின்றோம் என கூறியுள்ளது.

வேறு வங்கியுடன் இணைக்கப்பட திட்டம் இருந்தால் செபியிடம் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் இருப்பினும் இதுவரை அப்படி எந்த திட்டமும் இல்லை என பெடரல் வங்கி உறுதியாக கூறியுள்ளது. மேலும் பெடரல் வங்கி கடந்த ஜூன் காலாண்டில் நல்ல வருமானமும் லாபமும் ஈட்டி உள்ளது. இதனால் பங்கு விலை ஏற்கனவே 40 சதவீதம் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பெடரல் வங்கி 1931 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 1250 க்கும் மேற்பட்ட இடங்களில் பெடரல் வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது போக ஐக்கிய அரபு நாடுகள்,கத்தார், குவைத், ஓமன் போன்ற நாடுகளிலும் பெடரல்  வங்கி கிளைகள் இருக்கிறது.

Categories

Tech |