Categories
தேசிய செய்திகள்

பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசிய மர்ம நபர்…? நெஞ்சை பதற வைத்த சம்பவம்…தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!!

தூத்துக்குடியில் பிறந்த பச்சிளங்குழந்தையை கடலில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோஸ் பூங்கா அருகே இன்று காலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கடலில் மிதந்தபடி பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையின் உடல் கடலில் கிடப்பதால் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றதனால் பச்சிளம் குழந்தையின் உடல் கடலில் பாறாங்கல் இடையில் மிதந்து கிடந்தது.

அப்போது பச்சிளம் குழந்தையின் உடலை மீன்கள் கடித்து கொதறியது. இந்த சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது மேலும் சம்பவ இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக வந்த மறைன் போலீஸர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் யாரும் மர்ம நபர் பையில் குழந்தையை கொண்டு வந்து கடலில் வீசியதாக தெரியவந்துள்ளது.  யார் குழந்தையை கொண்டு வந்து கடலில் வீசினார்கள் என்பது பற்றி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் பிறந்த குழந்தை தொப்புள் கொடியுடன் குழந்தை இருப்பதால் சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்து வீட்டில் வைத்து யாரும் பிரசவம் செய்தார்களா என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தூத்துக்குடியில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |