Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. வந்தாச்சு அமேசான் பண்டிகை விற்பனை…. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா….????

தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.இருந்தாலும் இந்த விற்பனை எந்த தேதியில் இருந்து தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதற்காக அமேசான் இணையதளத்தில் தனி பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில சலுகைகள் போன்ற தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022:

  • எப்போதும் போல கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அமேசான் பிரைம் பயனர்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடும். அதேபோல டெலிவரியும் இலவசமாக கிடைக்கும்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடியும் , ஷாப்பிங்கில் 10% உடனடி சலுகை பெறலாம். இச்சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே.
  •  ஆப்பிள், சாம்சங், ரியல்மீ, ஐகியூ உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை 40% வரையிலான தள்ளுபடி விலையில், வெறும் 99 ரூபாய் முதல் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
  • டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும் சுமார் 70% தள்ளுபடிக்கு விற்பனைக்கு வருகின்றன.
  • வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. பழைய ஸ்மார்ட்போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்து 18,500 ரூபாய் வரை பெறலாம்.
  • வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி வட்டியில்லா EMI கட்டண முறையிலும் பொருட்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |