கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் கல்லூர்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பணி நேற்று மாலை வரை நீடித்தது. இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால் மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் இன்று இரண்டாவது நாளாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.