தொடர்ந்து மழை பெய்ததால் கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றுள்ளனர். மாலை நேரத்திலேயே கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் சாலைகளின் பொதுமக்கையின் நடமாட்டம் குறைந்துள்ளது.