இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் நிறுவனங்களின் ஊழியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. அதன்படி கல்லூரி முடித்த பிரஸ்ஷர்களுக்கு பயிற்றுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கியது. மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சம்பள உயர்வு ஒர்க் ப்ரம் ஹோம் உள்ளிட்ட சலுகைகளையும் வாரி வழங்கியது. இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், விப்ரோ, ஹச்சிஎல் டெக்கில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டில் ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது. அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முன்னணி ஐடி நிறுவனமான TCS வெளியிட்டுள்ள செய்தியில், ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் அனுபவம் பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டு சம்பள அப்ரைசல் அளிக்கப்படும். அதனை தொடர்ந்து பொருளாதாரம் மந்த நிலை ஏற்படும் அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் செலவுகளை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊதிய உயர்வு கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் TCS கொரோனா பாதிப்பு காலத்திலும் சம்பள உயர்வு பாதிக்கப்படவில்லை. எனவே சம்பள உயர்வு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.