தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் மிகவும் பிரபலமானது ஆகும். இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் 6-வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டிசென்றார். அதன்பின் 2-வது சீசனில் ரித்விகாவும், 3வது சீசனில் முகின்ராவும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை அடுத்து, தற்போது 6-வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நபர் குறித்த எதிர்ப்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதற்குமுன் நடந்த அனைத்து சீனனையும் கமல் தொகுத்து வழங்கி இருந்தார். இதனிடையில் கமல் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்குபெற முடியாமல் போனதால் சிம்புவும், ரம்யா கிருஷ்ணனும் சில தினங்கள் தொகுத்து வழங்கினர்.
இதன் காரணமாக தற்போது இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா (அல்லது) வேறு ஏதேனும் திரைப் பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்களா என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் பிக்பாஸ்நிகழ்ச்சி 6வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் மீண்டும் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவது போன்று புரோமோ வீடியோ இடம்பெற்றுள்ளது. அவற்றில், வேட்டைக்கு ரெடியா? என கமல் வசனம் பேசியுள்ளார். இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து நாயகன் மீண்டும் வரார் என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.