Categories
சினிமா தமிழ் சினிமா

கர்மா மிகவும் மோசமானது…. நேரம் பார்த்து ரவீந்தரை வச்சு செய்த வனிதா….!!!!

சோசியல் மீடியாவை திறந்தாலே தற்போது வைரலாகி வரும் சம்பவம் எது என்றால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான். சன் மியூசிக் தொகுப்பாளியாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் ஏற்கனவே திருமணமானவர், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவனுடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் திருப்பதியில் எளிமையாக குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவிந்தர் மகாலட்சுமி திருமணம் குறித்து பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது “அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை. யாருக்கு என்ன திருப்பி கொடுக்க வேண்டும் என கர்மாவுக்கு தெரியும். அதன் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதில் ரவீந்தர் பெயரை குறிப்பிடவில்லை. வனிதாவை ரவீந்தர் தொடர்ந்து விமர்சித்து வந்ததற்கு எதிர்வினையாக வனிதா இப்படி பதிவிட்டுள்ளார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |