இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து விட்டார். இதனால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுந்துள்ளனர்.
அப்போது சேகருக்கு தான் இணையதளத்தில் படித்த ஒரு செய்தி ஞாபகத்திற்கு வந்துள்ளது. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மீது உப்பை கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் வந்துவிடும் என்று ஒரு செய்தி இணையத்தில் இருந்துள்ளது. இதேபோன்று சேகரும் தன்னுடைய மகனின் மீது உப்பு குவியலை கொட்டியுள்ளார். ஆனால் 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாஸ்கரின் பெற்றோரை சமாதானம் செய்துள்ளனர். இதனையடுத்து பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு பாஸ்கரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.