நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணி நாய் ‘நைக்கி’-க்கு புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளார். ‘imnyke’ என பெயரிடப்பட்டுள்ள அந்த பக்கத்தை 40,000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதில் தனது நாயின் பிறந்தநாள் புகைப்படங்கள், அது செய்யும் சேட்டை வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார்.