பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார். இதையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், ”தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன்.
என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.