தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது.
இவர் தெலுங்கு நடிகர் பூஜிதா பொன்னாடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடிகை பூஜிதா சமூக வலைதளத்தில் பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், இதுபோன்ற பொய்யான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் கூறி வேதனை பட்டுள்ளார்.