விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடினர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
இத்திரைப்படம் விக்ரம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு பொதுவான ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே பொதுவான விமர்சனமாக இருக்கின்றது. மேலும் முதல் நாளில் நல்ல வசூலை குவித்த நிலையில் இரண்டாவது நாளில் இருந்து குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில் இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கின்றது. இவ்வார இறுதிக்குள் 25 கோடி தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகுந்த எதிர்பார்ப்பு கிடையே வெளியான இத்திரைப்படத்தின் வசூல் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.