பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 நாட்களாகவே ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் இருவருக்குமே இது 2-வது திருமணம் தான். அதாவது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்கள். இதில் மகாலட்சுமிக்கு திருமணம் ஆனது தான் பலருக்கும் தெரியும். ரவீந்தருக்கு திருமணம் ஆனது பற்றி பலருக்கும் தெரியாத சூழலில் தன்னுடைய முதல் திருமணம் பற்றி தற்போது ரவீந்தர் மனம் திறந்துள்ளார்.
அவர் மகாலட்சுமிக்கு மட்டும்தான் 2-வது திருமணம் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கும் 2-வது திருமணம் தான். என்னுடைய அந்த வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. அது ரொம்ப மோசமான காலகட்டம். நட்புனா என்னானு தெரியுமா படத்தினால் தான் எனக்கு விவாகரத்து ஆனது. ஏனெனில் நட்புனா என்னானு தெரியுமா படத்தை நான் தயாரித்தது என்னுடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இப்போது நட்புனா என்னனு தெரியுமா அணியும் என்னுடன் இல்லை. அந்த பொண்ணும் என்னுடன் இல்லை. அவர் ரொம்ப தங்கமான பொண்ணு. சொல்லப்போனால் நானும் மகாலட்சுமி எந்த தியாகமும் செய்யவில்லை. நாங்கள் 2 பேருமே மெச்சூரிட்டியானவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.