Categories
உலக செய்திகள்

“தம்பி இது உனக்கு தேவையா?”…. வித்தியாசமாக வீடியோ எடுக்க நினைத்த இளைஞருக்கு பேரதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

தினம்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை சிந்திக்க வைக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையிலும் வேடிக்கையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் வித்தியாசமான வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த நிலையில் அது கடைசியில் தோல்வியில் முடிந்து பேரதிர்ச்சியை அவருக்கு கொடுத்தது.

ஓடும் நீரை படம் எடுக்க வேண்டும் என நினைத்து தனது செருப்பு மீது மொபைலை வைத்து நீரில் ஓடவிடுகிறார். தண்ணீரில் மிதந்து கொண்டே செருப்பு வந்து இருந்தால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.ஆனால் செருப்பு மீது வைத்த செல்போன் தண்ணீருக்குள் விழுந்து செருப்பு மட்டும் மிதந்து கொண்டு வருகிறது. அதனைக் கண்டு சிறுவன் பேரதிர்ச்சி அடைந்தான்.உடனே தண்ணீருக்குள் குதித்து செல்போனை தேடிய நிலையில் செல்போன் கிடைக்கவில்லை.இந்த செயலை மற்றொருவர் வீடியோவாக எடுத்து பதிவிட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |