டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஏற்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருக்கிறது. இதனை செய்வதன் மூலமாக தற்போதுள்ள டிஜிட்டல் கணக்குகள் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தற்போது உள்ள புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் கடன் வழங்கும் சேவை வழங்குனர்கள் அல்லது டிஜிட்டல் லெண்டிங் செயலிகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் செய்யப்படும் ஏற்பாடுகள் அவற்றின் பொறுப்பை குறைக்காது எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அவர்கள் எப்போதும் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவது முக்கியமாகும் இந்திய ரிசர்வ் வங்கி பணிக்குழுவின் பரிந்துரைக்குப்பின் கடந்த மாதம் டிஜிட்டல் கடன்கள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து கடன்களின் விநியோகமும் மற்றும் திருப்பி செலுத்துதல் போன்றவை வங்கிக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே இருக்கும் இங்கு மூன்றாம் தரப்பினர் ஈடுபட மாட்டார்கள். இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக உயர்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக வட்டி கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து முறையற்ற வசூல் போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது.
ஆர்பிஐ இந்த வழிகாட்டுதலில் எஸ் பி எஸ் க்கு ஏதேனும் கட்டணங்கள் செலுத்தப்பட்டால் அதை ஆர் இ மூலம் செலுத்தப்படும் தினமும் கடன் வாங்கியவர் மூலம் அல்ல எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மூன்றாம் தரப்பு சங்கங்கள் தரவுகளை தவறாக பயன்படுத்துவது தரவு தனி உரிமை மீறல் நியாயமற்ற வணிக நடைமுறைகள் பற்றி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் தவறான சேகரிப்பை தடுப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக தற்போது டிஜிட்டல் கடன்களை வழங்குவதற்கு வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கான தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இத்தகைய சுரண்டல்களில் இருந்து பாதுகாக்க முடியும்.