Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….. தொலைந்து போன ரேஷன் கார்டை இனி…. ஈஸியா திரும்ப பெறலாம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். அப்படிப்பட்ட ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இதற்காக தற்போது உணவுத்துறை புதிய வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தொலைந்து போன ரேஷன் கடை ஆன்லைன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் திரும்ப பெறுவதற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான புதிய வசதியை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

அதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு உள்ளே சென்றதும் பயனாளர் ஐடி என்பதை பதிவிட வேண்டும்

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.

தற்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.

விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை நீங்கள் pdf வடிவில் சேமித்த டவுன்லோட் செய்ய வேண்டும்.

இந்த pdf படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் மீண்டும் புதிய ரேஷன் கார்டு உங்களுக்கு வழங்கப்படும்.அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். ரேஷன் கார்டில் மோசடி நடைபெறுவதை தடுக்க ஆதார் இணைப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Categories

Tech |