Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இந்த எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்”…. மாதாந்திர கூடத்தில்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…..!!!!

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் இணைச்செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் செல்வகுமார், தென்னரசு, தர்ம தாஸ், விஷ்ணுகுமார், ஜீவானந்தம், வேதியியலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது யாதெனில் “திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடைவீதி தேரோடும் நான்கு வீதிகள் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை பாகுபாடு இன்றி உடனே அகற்றி விட வேண்டும். மேலும் பொதுக்கூட்டம் கட்சி மாநாடு கூட்டம் போன்றவைகளை பொதுமக்கள் பயணம் செய்யும் திருவாரூர் நகர பகுதியில் இருக்கும் சாலைகளில் நடத்தக்கூடாது. இவை அனைத்தும் பொதுமக்களை எந்த வகையிலும் பாதிக்காதவாறு மாற்று இடத்தில் நகராட்சி சார்பில் பொது மேடை அமைத்து நடைபெற வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்வதால் காரைக்கால் மற்றும் மன்னை எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Categories

Tech |