திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் தனது வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. தற்போது பல திருமணங்களில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பல சண்டை காட்சிகளும் வெளியாகின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சாப்பாடினால் திருமணம் மண்டபமே சூறையாடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
They call it the Great Kerala Pappad Rebellion.
Watch how the demand for an additional pappad landed three people at the hospital with visible injuries during a wedding in Kerala. pic.twitter.com/XELxZ5vJgM
— South First (@TheSouthfirst) August 30, 2022
முட்டம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், திருக்குன்றாபுலா பகுதியை சேர்ந்த ஒரு ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்தை பார்த்து முடித்துவிட்டு பந்திக்குச் சென்ற மாப்பிள்ளையின் நண்பர்கள் சாப்பிட சென்றிருந்தார்கள். சாப்பாட்டிற்கு கூடுதலாக அப்பளம் வேண்டும் என்று நண்பர்களில் ஒருவர் கேட்டிருந்தார். அவர் கேட்ட அப்பளம் கொடுக்காமல் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயம் பார்த்து வாய் வார்த்தை தகராறு கைகளப்பாக மாறியது. மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் மண்டப ஊழியர்கள் இடையேயான சண்டை கோஷ்டி மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்து மண்டபம் முழுவதும் கலவரமாக மாறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.