பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரேக்கப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதுண்டு அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்பது பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ஒன்பது வருடங்களாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில் தான் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது இதற்கு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தான் கொடுத்த காரை அவரது புதிய காதலன் ஓட்டி வருவது பிடிக்காததால் அதனை கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் நானும் அவளும் 9 வருடங்களாக காதலித்து வந்தோம் ஆனால் தற்போது அவர் என்னை பிரேக் அப் செய்துவிட்டார். நாங்கள் பிரிந்ததை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பிரேக்கப் ஆகிவிட்டதற்காக இதுவரை எதையுமே நான் அவரிடம் கேட்டதில்லை மேலும் நான் அவருக்கு பரிசாக கொடுத்த காரை அவரது புதிய காதலன் பயன்படுத்துவது சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்துள்ளது. நாங்கள் பிரேக் அப் செய்வதற்கு முன் இருந்தே அந்தப் பையனுடன் அவர் பழகி வந்திருக்கின்றார் டேட்டிங்கில் இருந்த போதெல்லாம் அவருக்கு கார் உற்படை ஏகப்பட்ட பரிசுகளை வழங்கி இருக்கின்றேன். ஆனால் அவர் என்னை அவமானப்படுத்தி விட்டார் ஏமாற்றியதை கூட நான் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை ஆனால் அந்த காரை அவரின் புதிய காதல் ஓட்டி செல்வது எனக்கு பிடிக்கவில்லை தற்போது எனக்கு என்ன வேண்டும் என்றால் நான் வாங்கிக் கொடுத்த கார் உள்ளிட்ட பொருட்களை திரும்ப கேட்பதில் ஏதும் தவறாக என ஆதங்கத்துடன் கேட்டிருக்கின்றார். இதை கண்ட சமூக வலைதளவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள் மேலும் ஒரு சிலர் அதை அப்படியே விட்டு விடுங்கள் கடந்து விடுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றார்கள்.