கடலில் விமானம் விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் தனியார் விமானம் ஒன்று நேற்று 4 பேருடன் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் திசை திரும்பி சென்றது. இந்நிலையில் விமானம் திசை திருப்ப பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உடனடியாக விமானியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரவு 8 மணிக்கு வெண்ட்ஸ்பில்ஸ் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த லாத்வியா, லிதுவேனியா, சுவீட்டன் ஆகிய நாடுகள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்து ஏற்பட்ட இடத்தில் இறந்தவர்களின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் எரிபொருள் தீர்ந்து போனதால் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.