apple iphone 14 series சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இவ்வேளையில் அந்த மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் apple iphone 14 series மாடலின் சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் 2022 iphoneகளில் பல புது டிசைன் வழங்கப்பட இருக்கும் இந்த தருவாயில் ஆப்பிள் இதே மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. iphone 14 seriesல் தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட் நீக்குவது பற்றி ஆப்பிள் நிறுவனம் விவாதித்து வருவதாக தெரிகிறது. மேலும் iphone 15 seriesல் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் ஐபோன் மாடல்களில் E SIM மற்றும் PORT – LESS மாடலை கொண்டு வருவதில் APPLE அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த முறை E SIM வழங்குவதில் APPLE அதிக முக்கியத்துவம் கொடுக்க வருகிறது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
பெயருக்கு ஏற்றார்போல் E SIM என்பது digital sim ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் E SIM நிஜ sim card தேவையின்றி அதன் சேவைகளை வழங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகதான் ஆப்பிள் நிறுவனம் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று கூறலாம்.