தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்த 50,000 சிறப்பு மிகக் குறைத்து முகாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடி 10 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி 12-14 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த மாசம் 16 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 19,76,537 பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 14,98,193 பயனாளிகளுக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 15 17 வயதுடையவர்களுக்கு கோவில் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 30,50,267 பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 14,98,193 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள் முன் கலர் பணியாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி அன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39% முதல் தவணையாகவும் 90.61% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 35 வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெருநகர் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி ஆய்வு செய்தார். இதில் சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு பேசிய அமைச்சர், இன்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,28,993 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை 78,337 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணை 2,91,028 பயனாளிகளுக்கும் மற்றும் 8,59,628 பயனளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர்களில் 96.39% முதல் தவணையாகவும் 96.61% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை முன்னிட்டு இன்று தடுப்பூசி பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.