Categories
சென்னை மாநில செய்திகள்

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் இறக்கி விட்டதால் விபரீதம்…. +2 மாணவன் பலி…. பெரும் சோகம்…..!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் கோவூர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் சூர்யா மற்றும் யுவராஜுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளார்.அப்போது நண்பர்கள் ஏரியில் இறங்கி குளித்த போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கி விட்டனர். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார்.

அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் மீட்க போராடியும் அவரை மீட்க முடியவில்லை.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மாணவரின் உடலை சடலமாக மீட்டனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீச்சல் தெரியாமல் பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |