Categories
உலக செய்திகள்

சபாநாயகருக்கோ 75….. பிரதமருக்கு 70….. அதிபருக்கு 73…. எங்களுக்கு மட்டும் 60…. இலங்கை அரசை கலாய்க்கும் மக்கள்….!!!!

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச நிதிய குழுவிடம் இருந்து இலங்கை அரசு சமீபத்தில் கடன் வாங்கியுள்ளது. இப்படி பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பதற்கான வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 இலிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு வருகிற டிசம்பர் மாதத்தில் 60 வயது தாண்டியவர்கள் அனைவரும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ரணில் விக்கிரமசிங்கே அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நேர் மற்றும் எதிர் மாறான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதாவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை குறைத்ததை கண்டிப்பாக வரவேற்கலாம்.

அதே சமயம் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிப்பது போன்று அரசியல் தலைவர்கள் ஓய்வு பெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில் அரசியலில் 70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி 70 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களால் எப்படி சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் 75 வயதான மேற்பட்ட சபாநாயகர் முன்னிலையில் 70 வயதை தாண்டிய பிரதமரை வைத்துக்கொண்டு 73 வயதுடைய அதிபர் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைத்துள்ளார் என்று இணையதளத்தில் பலர் கேலி செய்து வருகின்றனர்.

Categories

Tech |