இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பிரதமர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக்கும், தற்போது வெளியுறவு மந்திரி லீஸ் டிரஸ்சுக்கும் போட்டியிடுகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்குகள் உடனடியாக என்ன தொடங்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
அதன் பிறகு இங்கிலாந்தை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது தெரியும். இந்நிலைகள் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸால் நான் தோற்கடிக்கப்பட்டாலும் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எந்த நிலையில் இருந்தாலும் ஆதரிப்பேன். தொடர்ந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராகவே நீடிக்க திட்டமிட்டுள்ளேன் என அவர் ப கூறியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாளை ஸ்காட்லாந்திற்கு சென்று இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அவரது பால்மோரல் கோட்டை இல்லத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முறைப்படி பிரதமராக நியமிக்கப்படுவார்.