Categories
சினிமா தமிழ் சினிமா

“விடுதலைப் படத்தில் சூரிக்கு பதிலாக முதலில் அவர்தான் நடிக்க இருந்தாராம்”…. மிஸ் பண்ணிட்டீங்களே தலைவரே என புலம்பும் ரசிகாஸ்….!!!!!!

சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் முதலில் அவர் தான் நடிக்க இருந்தாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் முதலில் சூரிக்கு பதிலாக வடிவேலு நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனதால் சூரி இத்திரைப்படத்தில் நடித்துள்ளாராம். இதைக் கேட்ட வடிவேலு ரசிகர்கள் இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே தலைவரே என ஃபீல் பண்ணி வருகின்றார்கள்.

Categories

Tech |