ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண மூலம் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது என ரசிகர்கள் கூறுகின்றார்கள்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் இருவரும் இணையத்தில் மாறி மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள். இதை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் நெட்டிசன்கள் இதை சத்தியமாக இது பார்க்கவே இல்லை என கூறியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டதன் மூலம் ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிகின்றது. காதலுக்கு லுக் தேவையில்லை, சைஸ் தேவை இல்லை, நல்ல மனசு இருந்தால் போதும் என கூறுகின்றார்கள் ரசிகர்கள். மேலும் உங்களுக்கு கிடைத்த மகாலட்சுமி போல எங்களுக்கும் ஒருவர் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பெண் கிடைக்காமல் காத்திருக்கும் 90 ஸ் கிட்ஸ் கூறி உள்ளனர்.