ரவீந்தர் இணையத்தில் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள்.
சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி.
திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இவர்கள் மகாபலிபுரம் ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றார்கள். மகாபலிபுரம் ரெசார்ட்டில் கழுத்தில் புது தாலியுடன் மாடர்ன் உடையிலிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் மகாலட்சுமி பகிர்ந்தார். மேலும் மகாலட்சுமி தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்து என் இதயத்தை திருடி விட்டாய், ஆனால் அது உங்களிடமே இருக்கட்டும் என நான் விடுகிறேன் என ரொமான்டிக்காக பதிவிட்டார்.
இதற்கு கணவர் ரவீந்தர் பதிலளித்ததாவது, நீ மறந்து விட்டாய் என நினைக்கின்றேன். நான் அதை என்னுடையதை வைத்து ரிப்லேஸ் செய்து விட்டேன்…. வேகத்தை சரிபார் பொண்டாட்டி என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவிற்கு வாழ்க்கைக்கு அன்பு தேவை…. அன்புக்கு மகாலட்சுமி தேவை…. ஐ லவ் யூ பொண்டாட்டி என பகிர்ந்தார்.
இது போல கணவன் மனைவி இருவரும் மாறி மாறி இன்ஸ்டாகிராமில் ரொமான்டிக்காக பேசி வருகின்றார்கள். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தி இருக்கின்றார்கள். ஆனால் நெட்டிசன்கள் இதெல்லாம் ரொம்ப ஓவரா. இருக்கு முடியலடா சாமி. இதற்கு வனிதாவே பரவாயில்லை போல. பீட்டரை திருமணம் செய்த போது அவர் தான் இப்படி செய்து வந்தார் என்றால் ரவீந்தருமா என கூறி வருகின்றார்கள்.