தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடைபாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இது தொடர்பாக பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் தான்.
ஆனால் இது தொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து இது தொடர்பாக உரிய விவரங்களை வழங்கும் படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் பள்ளி கல்வித்துறைக்கு தெரியாமல் தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதி செய்ய முடிகின்றது. அது மட்டுமல்லாமல் தொழிற்கல்வி பாடங்களை ரத்து செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றது. மேலும் இவர் கூறியிருப்பதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களை ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரம் பாதிப்படையும் வேலை வாய்ப்புகள் இருந்தும் மாணவர்கள் பெற முடியாத சூழல் ஏற்படும். அதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு முதல்வர் இதில் கவனம் மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.