Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேற லெவல்….!! 3 வயதிலிருந்து சாதனை படைத்த சிறுவன்…. குவியம் பாராட்டுகள்….!!

வேதியியல் தனிம அட்டவணையை 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும், புற்றுநோய் சிறப்பு நிபுணருமாக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல் மருத்துவரான ஆர்த்தி ஹரிபிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதுர்கிரிஷ் ஆத்விக்(6) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம். இதனால் 3 வயதில் 53 திருக்குறளை 3 நிமிடத்தில் கூறியும், 4 1/2 வயதில் 100 திருக்குறளை ஐந்து நிமிடம் 40 வினாடிகளில் கூறியும் ஆத்விக் சாதனை படைத்துள்ளார். இதனை குளோபல் ரெக்கார்ட்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ட்ரையம்ப் வேல்டவேல்டு ரெக்கார்ட்ஸ் ஆகியவை அங்கீகரித்து கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

தற்போது ஆத்விக் வேதியோயல் தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களையும் 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி ஆசிய புக் ஆப் ரெக்கார்டுசில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சிறுவனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பாராட்டியுள்ளார். இதுகுறித்து டாக்டர் தம்பதி கூறியதாவது, ஆத்விக் பள்ளி பாடங்களை எளிதாக குறைந்த நேரத்தில் படித்து முடித்ததை பார்த்தோம். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக திருக்குறளை கற்க தொடங்கிய எங்களது மகனுக்கு தினமும் ஒரு திருக்குறள் கற்றுக் கொடுத்து வருகிறோம். விரைவில் 1330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |