Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வந்தே பாரத் ரயில் தொடக்கம்….!!!!!

வந்தே பாரத் ரயிலின் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயிலிருந்து புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே தேர்வு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வழிதட சோதனைக்கு பிறகு சிஆர்எஸ் அனுமதி எடுக்க வேண்டும். பின்னர் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் சோதனை செப்டம்பர் 7ஆம் தேதி மற்றும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் மும்பை அகமதாபாத் இடையே நடைபெறும்.

வழிதட சோதனையில் பயணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ற சுமையை வைத்து இந்த ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. சோதனையின்போது சில இருக்கைகளில் பணியாளர்கள் அமர்ந்து, மீதமுள்ள இருக்கைகளில் சுமையை வைத்து ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் அதே வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பண்டிகை காலத்தில் இந்த ரயில் சேவையை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும். விரைவில் இது லக்னோபி-ரியாகராஜ்-கான்பூர் வழித்தடங்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 75 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |