இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா.
காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் கொண்டு காவேரிப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் பிணமாக தொங்கிய நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நதியா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டாரா? என வெவ்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.