பெற்றோர்கள் குழந்தைகளை திருமணம் செய்ய கூறி வற்புறுத்த வேண்டாம் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, படகுழுவினர் உட்பட திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சிம்பு பேசியதாவது, பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை திருமணம் செய்யக்கோரி வற்புறுத்த வேண்டாம். சமுதாயத்தில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக இங்கே பல்வேறு தவறுகள் நடக்கிறது. பசங்க முதல்ல அவங்க வாழ்க்கையை வாழட்டும். திருமணத்தைப் பற்றி மேலே இருக்கிறவர் முடிவு செய்வார். அவர் முடிவு செய்யும் வரை காத்திருப்போம் என்றார். இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 39 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சமீப காலமாகவே தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.