நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகர் கணேஷ் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இதில் கணேசனுக்கும், அவரைபோல் சூர்யாவின் தீவிரமான ரசிகை லாவண்யா என்பவருக்கும் சென்ற 1ம் தேதி கோயிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனால் மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென்று கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நடிகர் சூர்யா மணமக்களுக்கு திருமண வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். அத்துடன் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மனம்விட்டு பேச வேண்டும் என்று சூர்யா அறிவுரை கூறினார். அத்துடன் தான் ஒருமாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து உங்களை சந்திப்பதாக கூறினார். இவ்வாறு சூர்யா வாழ்த்துசொன்னதால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திகைத்து நின்றனர்.