Categories
சினிமா

நடிகை மகாலட்சுமியின் காதல் கிசுகிசு!…. முன்னாள் கணவர் யார்?.. எதற்காக டைவஸ்?…. லீக்கான தகவல்….!!!!

முன்னணி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகரன் மற்றும் நடிகை மகாலட்சுமி சங்கர் போன்றோருக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்நிலையில் மஹாலட்சுமியின் முதல் கணவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, மஹாலட்சுமி முதலில் அனில் குமார் என்பவரைதான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் இருக்கிற நிலையில், சென்ற 2019ம் வருடம் குடும்ப பிரச்சனை காரணமாக மஹாலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிக்கு சென்று விட்டார். இதையடுத்து மஹாலட்சுமி தரப்பிலிருந்து 10 வருடம் ஒன்றாக வாழ்ந்த கணவர் அனில் குமாருக்கு விவாரது நோடீஸ் அனுப்பி இருக்கின்றனர்.

ஆனால் அனில் குமார் அனைத்து பிரச்சனையும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நினைத்து மனைவியுடன் வாழ தயாராக இருந்தும், மஹாலட்சுமி பிடிவாதமாக இருந்துள்ளார். அதன்பின் தான் மஹாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதற்கிடையில் ஈஸ்வரின் மனைவி ஜெய ஸ்ரீ, மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் வீடியோ, சேட்டிங் ஆகியவற்றை வெளியிட்டு பகீர் கிளப்பினார்.

இதற்கு மகாலக்ஷ்மி, ஈஸ்வர் தனது நண்பர் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், இப்பிரச்சனை சீரியல் வட்டாரத்தில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டுமாக சீரியலில் நடிக்க வந்த மஹாலட்சுமி, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா”  சீரியலில் நடித்துவருகிறார். இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று 2 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரனை, அவர் திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |