தனது ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா ஃபோனில் வாழ்த்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரான இவருக்கும், அவரைப் போலவே தீவிர ரசிகையாக இருந்த லாவண்யா என்பவருக்கும் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி கோயிலில் நடைபெற்ற நிலையில், நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு வர முடியாததால் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது போனில் வாழ்த்து கூறிய சூர்யா, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே தங்களின் அபிமான நடிகர் வாழ்த்துக் கூறிய
சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்கள்.