தெலுங்கானாவின் ஜாகிராபத் தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு சென்ற அவர் அங்கு பிரதமர் மோடி படம் இல்லாததை பார்த்து மாவட்ட கலெக்டரை கண்டித்து இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன என கலெக்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால் அவரால் பதில் கூற முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும் இந்த வீடியோவை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. இது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் தனது twitter பக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கடந்த 2013 ஆம் வருடம் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கு உரிமை கோருபவர்களுக்கு எந்த அரசியல் தலைவர்களின் புகைப்படத்திற்கும் அப்போது தேவை எழவில்லை என சாடி இருக்கின்றனர். மேலும் பிரதமரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நிதி மந்திரி நடத்தி இருக்கும் இந்த நாடகம் மிகவும் மோசமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.