Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன நடக்குது இங்கே…? செவிலியரின் முகத்தை கடித்து குதறிய சைக்கோ இளைஞர்…. உச்சக்கட்ட பதற்றம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் கோபாலபுரத்தில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 டாக்டர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக உள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாருமில்லை. இந்நிலையில் ஆளில்லாத சமயத்தில் அந்த ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குள் நுழைந்த ஒரு இளைஞர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை கீழேதள்ளிவிட்டு அட்டுழியம் செய்துள்ளார்.

அத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தன் உடைகள் அனைத்தையும் கழட்டி நிர்வாணமாக அங்கேயே சுற்றிவந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தங்கும் விடுதியிலிருந்து வெளியே வந்த ஒரு செவிலியர் மீது அந்த இளைஞர் பாய்ந்துள்ளார். அப்போது பதறி நிலை தடுமாறிய செவிலியரை, அந்த இளைஞர் பலவந்தமாக பிடித்து அவரது முகத்தை கடித்து குதறி இருக்கிறார். இதன் காரணமாக செவிலியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியரின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கேயே அமர்ந்துக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் இளைஞர் பாளையம் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. அத்துடன் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காயம்பட்ட அந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Categories

Tech |