Categories
சினிமா

பல அப்டேட்களை குவிக்கும் பொன்னியின் செல்வன்….. புதிய போஸ்டர்….. வைரல் வீடியோ…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 ஆம் தேதி இசை வெளியீட்டு நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காற்றைப் போல் மென்மையானது கடல் போல் வலிமையானது என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |