தமிழகத்தில் கற்றல் குறைபாடுடைய தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான புதிய பயிற்சி திட்டம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் 10 முதல் 15 சதவீதம் குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்டவை மிகவும் அவசியம்.
இந்த திட்டம் தமிழக முழுவதும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிய உதவும்.தொடக்கப் பள்ளியில் தமிழ்வையில் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் வழி பயிற்சி திட்டம் என்பிடெல் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலமாக கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிய முடிவதோடு அந்த மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.