Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர் இனி வாழும் காலத்திலேயே…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு ஓய்வூதியத்தளர் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது ஓய்வூதியதாரர்களின் மறைவுக்கு பின்னர் அவர்களின் துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படுகிறது.இந்த பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழான நிதியை பெற ஓய்வூதியதாரர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் தொகையை பெற ஓய்வூதியதாரர் அவரது துணை ஆகியோர் வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,அவர்களின் கோரிக்கையை பரிசளித்து ஓய்வூதியதாரர் மற்றும் அவரது துணையாகியோர் வாழும் காலத்திலேயே குடும்ப பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |