டான் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து, வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இதில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, காளி வெங்கட், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது டான் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 130 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஒரு அறிமுக இயக்குனரின் படம் 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். மேலும் அறிமுக இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பளித்த நடிகர் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பலரும் தற்போது பாராட்டு வருகின்றனர்.