Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!!

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையில் இருந்து தன்னை காப்பாற்ற முயன்ற பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தில் உள்ள  ரோஹ்தக்கின் லகான்  மஜ்ராவிலிருந்து தோஹானாவுக்கு  மந்தீப் கவுர் என்ற பெண் தனது 9  வயது மகனுடன்  ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த பாதி பெட்டிகள் காலியாக இருந்துள்ளது. இந்நிலையில்  ரயில் தோஹானா ஸ்டேஷன் வந்துள்ளது. அப்போது அந்த சிறுவன் மட்டும் அழுது கொண்டு இறங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தோஹானா ஸ்டேஷன்   வருவதற்கு முன்பு அதே ரயிலில் பயணம் செய்த சந்தீப் என்பவர் மந்தீப்  கவுரிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சந்தீப் அந்த பெண்ணை  ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந்தீப்பும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |