Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : காயத்தால் விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்.!!

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி விலகியுள்ளார்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்.. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 78* ரன்களும், பக்கர் ஜமான்  41 பந்துகளில் 53 ரன்களும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 35* ரன்களும் எடுத்திருந்தனர்..

இதை அடுத்து களமிறங்க ஹாங்காங் அணி நிலைத்து நிற்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 38 ரன்னில் சுருண்டது.. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4ல் இந்திய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது..

இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி 2022 ஆசியக் கோப்பையில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில்பங்கேற்கமாட்டார் என்று .
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்இன்று  (பிசிபி) சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானின் அடுத்த போட்டிக்கு தஹானி விளையாடமாட்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளர்  காயம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டி20 ஆசியக் கோப்பை சூப்பர்-4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார். வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டது,” என்று பிசிபி தெரிவித்துள்ளது.

Categories

Tech |