ஒற்றை வார்த்தை பதிவு என்பது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் அரசியலில் ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசஙன்கள் என பலரும் தங்களுக்கு பிடித்த ஒற்றை வார்த்தையை பதிவு செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலின் “திராவிடம்” என்றும், இபிஎஸ் “தமிழ்நாடு” என்றும், சீமான் “தமிழ் தேசியம்” என்றும், சசிகலா “ஒற்றுமை” என்றும், ராமதாஸ் நம் “சமூகநீதி” என்றும், திருமாவளவன் “ஜனநாயகம்” என்றும் கமலஹாசன் “மக்கள்” என்றும் அவரவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து யாரெல்லாம் ட்விட் போட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் இருந்த நெட்டிசன்களுக்கு தமிழக காவல்துறையும் “காவல்” என்றும் திமுக எம்பி கனிமொழி “திராவிடம்” என்றும் நடிகர் ரோகிணி “அம்பேத்கர்” என்றும் பதிவிட்டுள்ளார். இவர்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவீட்டிற்கு அனைத்து தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் விஜயகாந்த் தன்னுடைய twitter பக்கத்தில் “வறுமை ஒழிப்போம்” என்று பதிவிட்டுள்ளார். இதுதான் அந்த வரவேற்புக்கான காரணம். கேப்டன் கேப்டன் தாங்க என்று நெட்டிசன்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
— Premallatha Vijayakant (@imPremallatha) September 3, 2022