Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்க சேர்ந்தாலே ஒரு மேஜிக் தான்” கண்டிப்பா புதுசா தான் பண்ணுவோம்…. படவிழாவில் நடிகர் சிம்பு….!!!!

நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதமேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு படக்குழுவினார் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது, இதுபோன்ற பிரம்மாண்டமான விழா எதுவும் எனக்கு சமீப காலமாகவே நடக்கவில்லை. இந்த பிரம்மாண்ட செட்டை பார்க்கும் போது நம் விழாதானா என்று சந்தேகம் வந்துவிட்டது. நானும் கௌதம் வாசுதேவ் மேனனும் இணையும் 3-வது படம் இது. நாங்கள் இணைந்தாலே புதிதாக ஏதாவது செய்வோம். நாங்கள் சேர்ந்தாலே ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். இப்படத்திலும் அது இருக்கும். நான் 19 வயது பையனாக படத்தில் நடித்துள்ளேன். நான் படத்தைப் பற்றி பேசக்கூடாது. படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் தான் படம் எப்படி இருக்க வேண்டும் என்று கூற வேண்டும் என்றார்.

Categories

Tech |