தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் நொச்சியத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி அவரது மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்தார். இதனால் தந்தை அவ்வப்போது திட்டி வந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த மகாலட்சுமி தாத்தா ராமனின் வயல் காட்டில் இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் அறிந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து இறந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு வந்தனர். இதையடுத்து தாம் திட்டியதால் தனக்கிருந்த ஒரே மகளும் இறந்துவிட்டார் எனவும் இனி தான் யாருக்காக உயிர் வாழ வேண்டும் எனவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் பொன்னுசாமி.
இதனால் மன விரக்தி அடைந்த பொன்னுச்சாமி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.