Categories
உலகசெய்திகள்

தொற்று அதிகரிக்க இதுவும் காரணம்…. பிரபல நாட்டில் 50,000 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!

ரஷியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டே செல்கிறது. 2-வது நாளாக இன்று 50,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அந்த நாடு முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9-ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் 92 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடு முழுவதும் பரவியது. இதனால் கோரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்றாகும். அந்த நாட்டில் தடுப்பூசி எடுப்பது மெதுவாக நடைபெறுகிறது. மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு ஊரடங்கு விதிக்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |