Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான எறும்புகள்” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கரந்தமலை அடிவார தோட்டங்களில் இருக்கும் செடி, கொடிகளில் விஷ எறும்புகள் இருக்கிறது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கரந்தமலை பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் அபத்தானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த வகை எறும்புகள் கடந்து சில மாதங்களாக கால்நடைகளை தாக்குவதால் நோய்கள் உண்டாகிறது. எனவே இந்த அரியவகை எறும்புகளை அழிக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |